• Friday, 22 November 2024
ஆப்கான் பிரச்சினை : இந்திய வர்த்தகம் பாதிப்பு

ஆப்கான் பிரச்சினை : இந்திய வர்த்தகம் பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் உலர்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் மட்டும் 55 கோடி டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு உலர் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு தேவையான பொருட்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் இந்தியாவுடனான இறக்குமதி, ஏற்றுமதி உறவை முழுமையாக நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் இந்தியாவுக்கு வருவது முழுமையாக நின்றுவிட்டது.

இதன் காரணமாக, வாகா எல்லை வழியாக வழக்கமாக 200 லாரிகளில் இந்தியா வரும் உலர் பழங்கள் வரத்து நின்றுபோனது. இதனால் உலர் பழ இறக்குமதியாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த உலர்பழ வியாபாரி ராஜிந்தர் ஷா தெரிவித்தார்.  தலிபன்கள் காபூலை முற்றுகையிட தொடங்கியதில் இருந்தே உலர் பழங்களின் விலை உயரத் தொடங்கி விட்டது. பாதாம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது. அத்தி, உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.250 வரை உயர்ந்து விட்டது என்றாலும் தற்போது தட்டுப்பாடு இல்லை.
 
உலர் பழங்கள் போதிய கையிருப்பு உள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற காரணத்தால் விலை உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய உலர்பழ வகைகள் தயாராக உள்ளன. விரைவில் சகஜநிலை திரும்ப வாய்ப்புள்ளது.

அதன்பிறகு உலர்பழ வர்த்தகம் சகஜநிலைக்கு திரும்பும் என்று ஆப்கான் வியாபாரிகள் தெரிவித்ததாக மும்பை வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
 
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!