• Thursday, 02 December 2021
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ரிலீஸ் டேட்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ரிலீஸ் டேட்

கடந்த ஆண்டு கமல் ஹாசனின் பிறந்தநாள் பரிசாக 'விக்ரம்' படத்தின் முன்னோட்டமாக டீசர் ஒன்று வெளியாகி ட்ரெண்ட் ஆனது. ஆனால், அந்த டீசருக்குப் பிறகுதான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கே கிளம்பினார்கள். கமலின் இந்தாண்டு பிறந்த நாளில் செம டீஸர் ஒன்று வெளியாகலாம் என கமலின் ரசிர்கள் மட்டுமல்ல.. லோகேஷின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் வந்தது என்னமோ போஸ்டர் லுக்குடன் க்ளான்ஸ் மட்டுமே வெளியாகி டிரெண்ட் ஆனது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பஹத்பாசில், விஜய்சேதுபதி, நரேன் என பலரும் நடித்து வரும் 'விக்ரம்' கமலின் 232 வது படமாக இப்படம் கணக்கில் வருகிறது. விஜய்யின் 'சர்கார்' பட ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன், சில வருட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லனரான இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் இரண்டு ஷெட்யூலும், அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியிலும் நடைபெற்றது.

மூன்றாவது ஷெட்யூலில் கமலுடன் பஹத்தின் கூட்டணியில் ஆக்‌ஷன் காட்சிகள் அன்பறிவ்வின் ஸ்டண்ட் அமைப்பில் படமாக்கப்பட்டன. 'கைதி'யைப் போல இது ஒரு எமோஷனல் ஆக்‌ஷன் படம் என்கிறார்கள். படத்தில் கமலுடன் ஜோடி உண்டா இல்லையா என்பதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருந்தது. ஆனால், கமலுக்கு ஜோடி இருக்கிறது என்றும் அந்த ஹீரோயின் போர்ஷன்தான் படத்தின் மெயின் கதைக்களம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்காக ஒரு முன்னணி நடிகையை கமலுக்கு ஜோடியாக தேர்வுசெய்திருக்கிறது படக்குழு.

கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக விக்ரமுக்கு சின்ன பிரேக் விட்டிருந்த படக்குழு, அடுத்த கட்ட படப்பிடிப்பை இம்மாதமே சென்னையில் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதமும் நடைபெற உள்ள படப்பிடிப்பும் சென்னையில்தான் நடக்கிறதாம். அத்தோடு, 'விக்ரம்' படத்தின் ஷூட் நிறைவுறுவதாக தகவல். வரும் பிப்ரவரியில் படத்தின் டீசர் வெளியாகலாம் என்றும், ஏப்ரலில் கோடை கொண்டாட்டமாக 'விக்ரம்' வெளியாகலாம் என்றும் சொல்கின்றனர் படக்குழுவினர்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!