காங்கோ கிராமத்தில் தங்க மலை
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (Congo) தங்க மலையில் கிராம மக்கள் தோண்டி தங்கம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
படங்களில் பார்ப்பதுபோல லுகிஹி என்னும் இடத்தில் கிராம மக்கள் வெறும் கைகளையும் அடிப்படை கருவிகளையும் பயன்படுத்தி மலையை குடைந்து தங்கம் எடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதனை தொடர்ந்து காங்கோ அரசாங்கம் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில் பலர் மலையில் தோண்டி தங்கம் எடுத்து சாக்குகளில் நிரப்பும் காட்சிகள் இடம்பெற்றன. மற்றொரு வீடியோவில் வீட்டுக்குக் கொண்டுவந்த தங்கத்தைக் கழுவி சேகரித்தனர். இந்த வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்ட ஊடகவியலாளர் அகமத் அலகோபரி, "தங்கத்தால் நிரம்பிய மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஆப்பிரிக்க கிராம மக்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கும்! கிராம வாசிகள் தங்கத் தாதுக்களைச் சேகரித்து வீட்டுக்கு எடுத்து சென்று தங்கத்தைப் பிரித்து கழுவி வைக்கின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கோவின் தெற்கு கிவு மாகாண சுரங்க அமைச்சர் புருமி முஹிகிவா லுகிஹியில் உள்ள மலையில் அதிக தங்கம் எடுக்கப்படுவதை உறுதிசெய்து வணிகர்கள், சுரங்கப் பணியாளர்கள் மற்றும் காங்கோ ஆயுத படையினர் அடுத்த அறிவிப்பு வரும்வரை சுரங்கத்தை விட்டுவெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்! இந்த இடைக்கால தடை தங்கம் எடுக்கும் ஊழியர்கள் முறையான ஒப்புதலோடு எடுக்கின்றனரா என அதிகாரிகள் சரிபார்க்க உதவும் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு காங்கோ தங்கம் குறித்து ஐ.நா சபையின் நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில், காங்கோவில் தங்கத்தின் உற்பத்தி குறைவாக மதிப்பிடப்படுகிறது எனக் கூறினர். மேலும் அண்டை நாடுகள் உதவியுடன் உலகளாவிய கடத்தல் சங்கிலி மூலம் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் தெரிவித்தனர். கைவினைஞர்கள் தங்கம் எடுப்பது ஆப்பிரிக்காவில் வழக்கம்தான் எனினும் 2019-ம் ஆண்டு பதிவின் படி 60கிலோ தங்கம் உற்பத்தியும் 70 கிலோ ஏற்றுமதியும் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comment / Reply From
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!