• Thursday, 05 December 2024
கே.வி.ஆனந்தையும் கொன்றது கொரோனா

கே.வி.ஆனந்தையும் கொன்றது கொரோனா

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.

கே.வி.ஆனந்துக்கு நேற்று இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

தற்போது ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!