• Thursday, 07 December 2023
கொட்டும் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

கொட்டும் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து,  நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர்  ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!