• Friday, 05 September 2025
செட்டிங் வைகையில் இறங்கிய கள்ளழகர்

செட்டிங் வைகையில் இறங்கிய கள்ளழகர்

தமிழகத்தில் முக்கிய திருவிழாவான மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் குடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் அனைத்தும் கோயில் வளாகத்தில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் அதே நேரம் பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.

கோயிலில் செயற்கையாக அமைக்கப்பட்ட வைகை ஆற்றில் சிறப்பு பூஜைகளுக்குப்பின் கள்ளழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்கக் குதிரையில் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.

மக்கள் பங்கேற்பு இல்லாமல், மண்டகப்படி வரவேற்பு இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்நிகழ்வை உலகம் முழுவதுமுள்ள ஆன்மிக மக்கள் இணையதளம் மூலம் கண்டு வணங்கினார்கள்.

சித்திரைத்திருவிழாவின் தொடர்ச்சியாக அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகரான சுந்தரராஜப்பெருமாள் மதுரைக்கு வருகை தந்து வைகையாற்றில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, அரசின் கட்டுப்பாட்டால் இன்று காலை அழகர்கோயில் வளாகத்திலயே  செயற்கையாக உருவாக்கப்பட்ட வைகை ஆற்றில் நடந்து முடிந்தது.

அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் கள்ளழகர் திருவிழாவுக்காக நேர்த்திக் கடன் வைத்து விரதமிருந்த மக்கள் மதுரையிலுள்ள வைகை ஆற்றுக்கு வருகை தந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

 

Comment / Reply From