• Saturday, 25 September 2021
தங்கம் விலை... அடேங்கப்பா.... பவுன் ரூ.36 ஆயிரம்

தங்கம் விலை... அடேங்கப்பா.... பவுன் ரூ.36 ஆயிரம்

தங்கம் விலையில் கடந்த மாதம் தொடர்ந்து உயர்வு காணப்பட்டு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவியது. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

இதற்கிடையே கடந்த 28-ந்தேதி பவுன் மீண்டும் ரு.36 ஆயிரத்தை தொட்டது. ஆனால் மறுநாளில் இருந்து விலை குறைந்தபடி இருந்தது.
நேற்று பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கம் இன்று பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 496 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.69 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.60-க்கு விற்கிறது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!