• Friday, 22 November 2024
மலையாளத்தில் பட்டையை கிளப்பும் ‘பசங்க’ ஸ்ரீராம்

மலையாளத்தில் பட்டையை கிளப்பும் ‘பசங்க’ ஸ்ரீராம்

 

’பசங்க’ படத்தில் சிறந்த நடிப்பாற்றலால் தேசிய விருதை வென்றவர் நடிகர் ஸ்ரீராம்.

குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றது , சிறுவயதிலேயே தேசிய விருது வாங்கியது, மலையாளத்தில் முதல் படத்திலேயே நேரடி கதாநாயகன் ஆனது இப்படிப்பட்ட பெருமைகள் உலகநாயகன் கமல்ஹாசனின் வாழ்க்கையில்தான் வாய்த்துள்ளன. அவரது பரம ரசிகனான ஸ்ரீராமுக்கும்  அதே பெருமை வாய்த்துள்ளது அவர் செய்த பாக்கியமே.

அண்மையில்  ஓடிடி தளத்தில் வெளிவந்த 'நவரசா' படத்தில் இடம்பெறும் 'ரௌத்திரம் ' நாயகனாக முத்திரை பதித்த ஸ்ரீராம், மலையாளத்தில் இப்போது நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு இப்படி மலையாளத்தில் நேரடி கதாநாயகனாக  அறிமுகமானவர் கமல்ஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அபிமான நட்சத்திரத்தின் அடிச்சுவட்டில் பயணம் செய்வதில் பெருமைப்படுகிறார் ஸ்ரீராம்.

ப்ளூம் இண்டர்நேஷனல்  சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் 'எக்ஸிட் ' என்ற படம் மூலம் மலையாளத்தில் தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார் . புதுமுக இயக்குநர் ஷாகீன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, கேரளாவின் குட்டிக்கணம் மலைப்பகுதியிலும்  பாலக்காட்டிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

படபிடிப்பு   தொடங்கிய சில நாட்களிலேயே ஸ்ரீ ராமின் நடிப்பாற்றலையும் கடும் உழைப்பையும் கண்டு வியந்த தயாரிப்பாளரும் இயக்குநரும்  'எக்ஸிட்' படத்தை  மலையாளம் மட்டுமல்லாது, தமிழிலும் தயாரிக்க முடிவு செய்துவிட்டனர்..
வளர்ந்து வரும் தமிழ் நடிகர் ஒருவருக்கு வெளிப்புறப் படபிடிப்புத் தளத்தில் கேரள மாநிலத்தின் மக்கள் கொடுக்கும் வரவேற்பைக் கண்டு அந்தப் படத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.


ஸ்ரீராமின் தந்தை சிவ.ராமகிருஷ்ணா மலையாளத் திரைப்பட உலகில் மறைந்த பிரபல திரைப்பட  இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராக மோகன்லால் மீனா நடிப்பில் வர்ணப்பகிட்டு,  குஷ்பு, சுரேஷ்கோபி நடிப்பில் அனுபூதி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
 

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!