• Thursday, 05 December 2024
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை ஒவ்வொரு ஆண்டும் யார் பெறப்போகிறார் என்ற ஆர்வம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இருக்கு. இந்த முறை 51வது தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு அறிவித்து கெளரவித்திருக்கிறது மத்திய அரசு.

சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதுதான், தாதாசாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில் விருதினை வழங்கி வருகிறது. இதனை முதலில் பெற்றவர், இந்தி நடிகை தேவிகா ராணி. சமீபத்தில் 2018-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து கெளரவித்தது இந்திய அரசு.

இதுவரை தமிழில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த உயரிய விருதினை பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றிருக்கிறார். ஏற்கெனவே, மத்திய அரசுடைய பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை ரஜினிகாந்த் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விருதை அறிவித்துவிட்டு பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "தமிழக தேர்தலுக்கும் ரஜினிக்கு விருது அறிவித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!