• Thursday, 21 November 2024
நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்கதானே... இசைப்புயல்!

நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்கதானே... இசைப்புயல்!

சென்னை: சன் டிவியில் இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய போது, அவரை நகைச்சுவை நடிகர் விவேக் நேர்காணல் கண்டதை மறு ஒளிபரப்பு செய்தார்கள்.அப்போதுதான் விவேக்கைப் பார்த்து ரஹ்மான் நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்கதானே என்று கேட்டார். இரண்டு கையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை வாங்கி வந்த நேரம், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு நேர்காணல் செய்தன. அந்த நேரத்தில் சன் டிவிக்காக ரஹ்மானை நேர்காணல் செய்து இருந்தார் நடிகர் விவேக். இருவரும் பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாக பேசினார். மறு ஒளிபரப்பிலும் நிகழ்ச்சி பார்க்கக் நன்றாகவே இருந்தது.

 இசை தெரபி சிரிப்பு தெரபி

 

இசை தெரபி சிரிப்பு தெரபி மனம் ஒரு மாதிரி சோகமா இருக்கும்போது இசை தெரபி சரி வரும்னு படிச்சு இருக்கேன்...இது உண்மையா சார் என்று விவேக் ரஹ்மானைப் பார்த்து கேட்க, நிறைய படிப்பீங்க போல இருக்கே என்று கேட்டு ரஹ்மான் சிரித்தார். உங்களை பார்க்க வரும்போது இதை எல்லாம் தெரிஞ்சுக்காம வர முடியுமா என்று விவேக் சிரித்தார்.

 தமிழ் படங்களின் நகைச்சுவை

 

தமிழ் படங்களின் நகைச்சுவை தமிழ் படங்களின் நகைச்சுவை உங்களுக்கு பிடிக்குமா? எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று கேட்டார் விவேக். தமிழ் படங்களின் நகைச்சுவை ரொம்ப நல்லா இருக்கும். உங்க காமெடி நிறைய பார்ப்பேன். நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்க இல்லேன்னு கேட்டார். ஆமாம்னு சொன்னார் விவேக்.

 கேபி சார்

கேபி சார் ஒரு நாள் கேபி சார் என்னை கூப்பிட்டு, இந்த இசையை கொஞ்சம் கேளுடான்னு சொல்லி என்னை உட்கார வச்சார். அப்போது அந்த இசையை கேட்டுட்டு, என்ன சார் ரொம்ப சாதாரணமா இருக்குன்னு கேட்டேன். சாதாரணமா இருக்குல்ல.. நிச்சயம் ஜெயிக்கும்டான்னு சொன்னார். அந்த டியூன்தான் நீங்க போட்ட சின்ன சின்ன ஆசை பாடலின் டியூன் என்று சொன்னார் விவேக்.

 சிரிச்சு சகஜமா

சிரிச்சு சகஜமா என் இசையில் பாட வரும் புது பாடகர்கள் ரொம்ப பயந்து பயந்து வருவாங்க. சகஜ நிலைக்கு வரவே முடியாத மாதிரி இருப்பாங்க. இப்படி இருந்தால், இவர்களிடம் இருந்து நல்ல திறமையை வெளிக்கொணர முடியாதுன்னு சொல்லி, அவங்ககிட்டே சகஜமா சிரிச்சு பேசுவேன். அப்புறம்தான் ரெக்கார்டிங் எல்லாம் என்று சொன்னார் ரஹ்மான். புது இயக்குனர்கள் கூட அப்படித்தான் பயந்து பயந்து வருவாங்க.. அவர்களையும் சிரிச்சு பேசி சகஜமாக்கித்தான் உட்கார வச்சு பேசுவேன் என்று சொன்னார்.


Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!