• Friday, 05 September 2025
அமெரிக்கா பறக்கும் ரஜினி

அமெரிக்கா பறக்கும் ரஜினி

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'அண்ணாத்த' படத்தின் முதல் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு 2020, பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது. ஆனால், லாக்டெளன் வர உலகமே ஸ்தம்பித்து நின்றது. பின், 2020 அக்டோபர் மாதம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என நினைத்திருந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் ஷூட்டிங் போகலாம் எனக் கூறிவிட்டார் ரஜினிகாந்த்.

இதனால் டிசம்பர் மாதம் பயோபபுளுடன் கூடிய தீவிர பாதுகாப்புகளுடன் 'அண்ணாத்த' படக்குழு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு சென்றது. டிசம்பர் 14-ல் இருந்து 40 நாட்கள் ரஜினியின் கால்ஷீட் இருந்தது. ஆனால், அந்தப் படக்குழுவில் இருக்கும் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் வர, ரஜினிக்கும் ரத்த அழுத்தம்கூட சில நாள்களிலேயே சென்னைக்கு திரும்பியது படக்குழு. அதன்பிறகு, மார்ச்சில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டு அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன், ரஜினி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்து 25 நாள்கள் ரஜினியின் கால்ஷீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2011, ஏப்ரல் 2 - இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நாள். மும்பையில் நடந்த அந்த இறுதி போட்டியை நேரில் காண ரஜினிகாந்த் சென்றிருந்தது அனைவருக்கும் தெரியும். அந்தப் பயணத்தின் போது ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிங்கப்பூர் சென்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அடுத்து 2016-ல் 'கபாலி' படத்தை முடித்துவிட்டு இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரஜினி. முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து 10 ஆண்டுகள் ஆவதை அடுத்து 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு வரும் மே மாதம் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த். அங்கே அவரின் சிறுநீரக செயல்பாடுகள் குறித்த ஹெல்த் செக்அப் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

Comment / Reply From