• Friday, 05 September 2025
தனுஷ், கார்த்தி படங்களுக்கு சிக்கல் இல்லை

தனுஷ், கார்த்தி படங்களுக்கு சிக்கல் இல்லை

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுவதால் லாக்டெளன் மீண்டும் போடப்படும் என்கிற பரபரப்பு நிலவியது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த கார்த்தியின் 'சுல்தான்', ஏப்ரல் 9-ம் வெளியாகவிருந்த தனுஷின் 'கர்ணண்' படங்களின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கொரோனா பரவல் தொடர்ந்தாலும் தமிழ்நாட்டில் லாக்டெளனுக்கு வாய்ப்பில்லை என தமிழக அரசின் சார்பில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான அரசு அறிவிப்பில் தளர்வுகளுடன் கூடிய லாக்டெளன் ஏப்ரல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் திரையரங்குகள் வழக்கம்போல செயல்படும் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதால் 'சுல்தான்', 'கர்ணன்' படங்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி, அறிவித்த தேதிகளில் வெளியாகின்றன.

'சுல்தான்', 'கர்ணன்' என இரண்டுபடங்களுமே சென்சார் பெற்றுவிட்டன. இரண்டுமே U/A சான்றிதழ் பெற்றிருக்கின்றன. 'சுல்தான்' படம் மூலம் தெலுங்கு, கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேப்போல் 'கர்ணன்' படம் மூலம் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார்.

Comment / Reply From