• Friday, 05 September 2025
வலுவிழந்தது குலாப் புயல்

வலுவிழந்தது குலாப் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் நேற்று இரவு கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
 
அதன் பின், புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 6 மணி நேரமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று அதிகாலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்தது. 

 
தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயல், மழை காரணமாக முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
 

Comment / Reply From