• Friday, 05 September 2025
‘ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்

‘ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்

விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இது, விஷ்ணு விஷாலின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். 
 
தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. அதன்படி ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். இந்தியிலும் ராட்சசன் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்தியில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 
 
முதலில் ஆயுஷ்மான் குரானா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ரமேஷ் வர்மா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comment / Reply From