• Friday, 05 September 2025
’மண்டேலா’ திரை விமர்சனம்

’மண்டேலா’ திரை விமர்சனம்

பொட்டல் காடாய் காட்சியளிக்கும் ஊராட்சி சூரங்குடி. சாதிப் பெருமை பேசித்திரியும் மனிதர்களுக்கு மத்தியில், ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சங்கிலி முருகன். வடக்கூர் மற்றும் தெக்கூர் என இரண்டு ஊர்களிலிருந்து இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வார் கிராமத்தின் ஒற்றுமை வளர்ப்பதற்காக. இப்படிச் செல்லும் கதையில், ஒரு கட்டத்தில் புதியதாக வாக்காளர் அடையாள அட்டை வாங்கும் சலூன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவின் ஓட்டுக்கு  முக்கியத்துவம் பிறக்கிறது.. இதை வைத்து  கலகலப்பாக படத்தை எடுத்துள்ளார்  இயக்குநர் மடேனி அஸ்வின்.

இளிச்சவாயனாக கிராமத்தில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் யோகி பாபுவை, நெல்சன் மண்டேலாவாக மற்றும் ஷீலா ராஜ்குமாரின் எதார்த்தமான நடிப்பு பாராட்ட வைக்கிறது. யோகி பாபுவின் உதவியாளராக வரும் முகேஷின் நடிப்பு அபாரம். படத்தில் நடித்துள்ள பெரும்பாலான நடிகர்கள் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொட்டல்காடாய் காட்சியளிக்கும் கிராமத்தை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வித்யு அய்யன்னா. அதேபோல் கலை இயக்குநர் ராமு தங்கராஜ், எடிட்டர் பிலோமினும் மண்டேலா திரைப்படம் பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணமானவர்கள் எனலாம்.

யுகபாரதியின் வரியில் ‘ஒரு நீதி ஒன்பது சாதி’ பாடலும், தெருக்குரல் அறிவு வரியில் ’யெலா யெலோ’, ’ஏலே மண்டேலா’  என்ற பாடலும் காத்திரமான அரசியல் மற்றும் மண்வாசனை வீசும் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றன. வரிகளுக்கு ஏற்ற இசையைக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் பரத் சங்கர் பின்னணி  இசையில் பின்னி எடுத்திருக்கிறார்.  

வாக்கு அளிப்பதின் முக்கியத்துவத்தைச் சாதாரண மக்களும் புரியும் வகையில் எடுத்துக்கூறி ஒரு கலகலப்பான அரசியல் சினிமாவை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மடோனி அஸ்வின்.
தேவையான காலத்தில் வந்துள்ள படம்!

Comment / Reply From