• Friday, 04 July 2025
ஐபிஎல் ஒளிபரப்பு : துட்டு அள்ளும் சேனல்

ஐபிஎல் ஒளிபரப்பு : துட்டு அள்ளும் சேனல்

கடந்த ஆண்டு கொரோனா, லாக்டெளன் களேபரங்களுக்கு இடையே ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. பார்வையாளர்கள் ஸ்டேடியங்களில் இல்லையென்றாலும் டிவி விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம் கிடைத்தது. இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபம் பார்க்க, இப்போது கட்டண உயர்வை அறிவித்துவிடத் தயாராகிவிட்டது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பான 10 செகண்ட் விளம்பரத்துக்கு 12.5 லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இரண்டு மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவின் மூலம் டிவி மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக மொத்தமாக 2,400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது ஸ்டார் நிறுவனம்.

 

2021 ஐபிஎல் இந்தியாவிலேயே நடைபெற இருப்பதால், இந்த ஆண்டுக்கான பார்வையாளர் எண்ணிக்கை(Viewership) இன்னும் கூடும் என்பதால் விளம்பரக் கட்டணத்தை 25 - 30 சதவிகிதம் அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது.

ஐபிஎல் 2020
ஐபிஎல் 2020

2021 ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்புவதற்கான 10 செகண்ட் விளம்பரத்துக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுக்கவேண்டியிருக்கும்.

ஐபிஎல் போட்டிகளுக்கான கோ-ஸ்பான்சராக ஒவ்வொரு நிறுவனமும் 100- 120 கோடி ரூபாய்கள் தருகின்றன. அசோசியேட் ஸ்பான்சர்களுக்கான கட்டணம் ரூ.50- 60 கோடி.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!