• Friday, 22 November 2024
அதிமுகவில் சசிகலாவா? ஹய்யோ ஹய்யோ.. நகைக்கும் எடப்பாடி

அதிமுகவில் சசிகலாவா? ஹய்யோ ஹய்யோ.. நகைக்கும் எடப்பாடி

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றபின் முதல்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

9 மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக.

* கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்.

* கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

* ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி திட்டம் குறித்து பேசினேன்.

* கோதாவரி-காவிரி திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்ட செய்தியால் மகிழ்ச்சி அடைந்தேன்.

* கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

* கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக்கூடாது. பரிசோதனை முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

* கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வலியுறுத்துவோம். அதிமுக உறுப்பினர் இல்லை. சசிகலா அதிமுகவில் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடங்கங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.
 
* அமமுக தொண்டர்களுடன் தான் சசிகலா பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!