அதிமுக உட்கட்சி தேர்தல் : நடக்கப்போவது என்ன?
அதிமுக உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்த போதுது உள்கட்சி தேர்தலை நடத்தினார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு உள்கட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.
அப்போது கொரோனா பரவிய காலமாக இருந்ததால் உள்கட்சி தேர்தல் அ.தி.மு.க.வில் நடைபெறவில்லை. அதிமுக, உள்கட்சி தேர்தலை நடத்த முயற்சி செய்யும் போதெல்லாம் ஒவ்வொரு பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்தது.
சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சிமன்ற தேர்தலவில் ஏற்பட்ட சலசலப்பு என பல்வேறு விஷயங்கள் காரணமாக உள்கட்சி தேர்தல் நடைபெறுவது காலதாமதமாகிக் கொண்டே சென்றது.
இந்தநிலையில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டிlல் அதிமுகல் பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் உள்கட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க.வில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தி.மு.க. அரசு தவறிவிட்டதாகக் கூறி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற 9-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இந்த ஆர்பாட்ட நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அதிமுக உள்ள்கட்சி தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்துவதற்கு கோர்ட்டு கெடு விதித்துள்ளதால் இந்த மாதம் உள்கட்சி தேர்தலை நடத்த தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும்.
அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் முதலில் நடத்தப்படும். அதன் பிறகு ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்டம் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இறுதியாக தலைமைக்கு தேர்தல் வரும்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!