• Saturday, 23 November 2024
ஊரடங்கு நீட்டிப்பு ; டாஸ்மாக் திறப்பு

ஊரடங்கு நீட்டிப்பு ; டாஸ்மாக் திறப்பு

மிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் திங்கள்கிழமை காலையுடன் நிறைவடையும் நிலையில், நேற்று முதலவர் மருத்துவக்குழுவினருடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், தற்போது தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • கடைகளின் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்பட்டிருப்பதோடு உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனையும் செய்ய வேண்டும்.

  • கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயம் முகக்கவசம் அணிவதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  • அனைத்துக் கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

  • கடைகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

 

இந்த ஊரடங்கின்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்ப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கருத்தில்கொண்டும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கும் மட்டும் 14-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதிக்கப்படும்.

  • மின் பணியாளர்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். வாடகை டாக்ஸி ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

  • வேளாண் உபகரணங்கள், பம்புசெட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வேளாண் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி!

  • ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து இதர பகுதி 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலுள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படும்.

  • மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருள்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

  • டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

  • செல்போன் மற்றும் அது சார்ந்த பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மிக்ஸி, கிரைண்டர், டி.வி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

  • பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

  • ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்கள் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றித் தொடர்ந்து செயல்படலாம்.

  • தற்போது தொழிற்சாலைகளும் 33 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி வழங்கப்படும்.

  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் இரு சக்கர வாகனங்களில், தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகித பணியாளர்கள் அல்லது பத்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  • வீட்டு வசதி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!