• Friday, 05 September 2025
எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் அதிரடி சோதனை

எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் அதிரடி சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். வேலுமணியின் சென்னை, கோவை, வீடு, வேலுமணி சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், கே.சி.பி இன்ஜினியர்ஸ் சந்திபிரகாஷ் என்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தினர். கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி லாக்கர் சாவி ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புக் குழு, எஸ்.பி வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், அவரின் லாக்கரை திறந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வங்கி அதிகாரிகளிடம், “கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது?” உள்ளிட்ட விபரங்களை விசாரித்துள்ளனர்.

மேலும், வேலுமணி வங்கி கணக்கு குறித்த ஆவணங்களை பெற்று சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், லாக்கரில் இருந்து ஏதேனும் ஆவணங்கள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Comment / Reply From