
கொரோனா தீவிரம் : மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட செயல்பாடுகள் வருமாறு:-
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டிருப்பதால் இதற்கான தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைபிடிக்கப்படும்
நோய்ப் பரவலைக் கருத்தில்கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பத்தாம் தேதி முதல் தடைவிதிக்கப்படுகிறது.
வரும் 10-ம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கறி அங்காடிகள் மட்டும் செயல்படத் தடைவிதிக்கப்படுகிறது. அதே போன்று மாவட்டங்களிலுள்ள மொத்த வியாபார காய்கனி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரக் கடைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.

நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.
முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களைக் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைக்கு ஏற்ப தடுப்பூசிகள் போட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும்
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
தற்போது நோய்த் தொற்று அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி புதுச்சேரி, ஆந்திரா, மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகளிலுள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி காய்கறிக் கடைகள், பலசரக்கு கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள், ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணிவரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
கேளிக்கை விடுதிகளில் 50 சதவிகித விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பொழுதுபோக்குப் பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்திலுள்ள திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்துத் திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படும்,
உள்ளரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு கலாசார நிகழ்வுகள், விழாக்கள் அனுமதிக்கப்படும்.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.
நீச்சல் குளங்கள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் அவை சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்பு தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள், பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வதை திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்களைத் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 4, 2021
-
'தி லெஜண்ட்’ விமர்சனம்
- Post By Admin
- July 30, 2022
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!