• Friday, 04 July 2025
டவுன் டவுன் லாக் டவுன்

டவுன் டவுன் லாக் டவுன்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் ஆலோசனையில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று தற்போது புதிய கட்டுப்பாடுகள் வந்திருக்கிறது.

  • வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

  • அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்க அனுமதி இல்லை.

  • பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை/ காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப் படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட வேண்டும்.

 
  • சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள் சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

  • அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

  • அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டுடன் இயங்கலாம்.

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. எனினும் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள் ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடை இல்லை.

  • கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு, திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் மனு பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்து முன்னேற்பாடுகள் செய்து இருந்தாலோ 50 நபர்கள் பங்கேற்பு நடத்திட மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுகிறது புதிதாக குடமுழுக்கு விழா நடத்த அனுமதி இல்லை.

முழு ஊரடங்கு -சென்னை
முழு ஊரடங்கு -சென்னை
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது

  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

  • அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் அல்லது குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

  • புதுச்சேரி தவிர்த்து ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்கள் இ-பதிவு விவரத்தினை தமிழ் நாட்டுக்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

  • வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் பயணிகள் அனைவரும் பதிவு செய்த இப்பதிவு விபரத்தினை தமிழ் நாட்டுக்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

  • தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் 3 பயணிகள் மட்டுமே பயணிக்கவும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் பயணிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!