• Friday, 05 September 2025
துள்ளுவதோ இளமை.. தேன் நெல்லியின் பயன்கள்

துள்ளுவதோ இளமை.. தேன் நெல்லியின் பயன்கள்

 

ஒரு கட்டுரை அல்ல ஒரு புத்தகமே போடலாம்! நெல்லிக்காயில் அவ்வளவு மேட்டர் இருக்கிறது. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம் என்பது ஆங்கிலப் பழமொழி. ஆனால் ஒரு நெல்லிக்காயிலேயே மூன்று ஆப்பிள்களுக்குச் சமமான சத்துகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டாயமாகத் தேவைப்படும் விட்டமின் சி நெல்லிக்காயில் ஏராளம், அது கிட்டத்தட்ட 20 ஆரஞ்சு பழங்களுக்குச் சமமாம்.

நெல்லிக்காய் பலன்கள்.

* நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

* முதுமையைத் தள்ளிப்போடும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் அதிகம்

(அதியமான் - ஒளவையார் கதை ஞாபகம் வருகிறதா?)

* உடலில் கேன்சர் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

* ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தச் சோகையைக் குணப்படுத்துவதில் பேரிச்சம்பழங்களை விட சிறப்பாக செயல்படுகிறது.

* டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருள்கள் இருக்கின்றன.

* கண் நோய்களுக்கு அருமருந்து!

* விட்டமின் சி, உணவிலிருந்து சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ள உதவுகிறது.

* முதுமையை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்களை உடலில் இருந்து அகற்றுகிறது!

முதுமையைத் தள்ளிப்போடத் 'தேன் நெல்லி'!

இவ்வளவு பயன்கள் இருப்பதால்தான் இன்று உலகளவில் இந்திய நெல்லிக்காய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. என்றும் இளமையாக, துள்ளிக் குதித்து வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள் கட்டாயம் தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும்!

சரி, ஒரு முழு நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் நிறைய தண்ணீர் பருக வேண்டும். ஆதலால் தேனில் நெல்லியை ஊரப் போட்டு சாப்பிடலாம். இதன் சுவையை சொல்லி மாளாது, சுவைத்தவர்களுக்குத்தான் அந்த அருமை புரியும்! மேலும் தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் தேனின் நற்குணங்கள் நமக்குக் கிடைப்பதோடு, நெல்லியின் முழுப்பயன் நமக்குக் கிடைக்கிறது.

 

Comment / Reply From