• Sunday, 24 November 2024
பிளஸ் 2 தேர்வு பற்றி இரண்டு நாளில் முடிவு : அமைச்சர் பேட்டி

பிளஸ் 2 தேர்வு பற்றி இரண்டு நாளில் முடிவு : அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு குறித்த இந்த ஆலோசனை கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ``மாணவர்களின் கல்வியுடன் உடல் நலனும் முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு இன்னும் 2 தினங்களில் தேர்வு குறித்து அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்றார்,

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!