வண்டலூர் சிங்கங்களுக்கும் கொரோனோ
வண்டலூர் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கடந்த 3-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அன்றே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. மற்ற சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 வயதான கவிதா, 19 வயதான புவனா என்ற 2 பெண் சிங்கங்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. 2 சிங்கங்களையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சிங்கங்களை தொடர்ந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நேற்று காலை வண்டலூர் பூங்காவில் முதல்-அமைச்சர். மு.க.ஸ்டாலின்ர் ஆய்வு செய்தார். அப்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!