• Saturday, 23 November 2024
வானில் இன்று சூப்பர் மூன்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

வானில் இன்று சூப்பர் மூன்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
 
2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 3.15 முதல் 06.23 வரை நிகழ உள்ளதாகவும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படும் முழு சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுவதால், "இரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது. 
 
சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாக சூழ்வதால், சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் சூப்பர் ப்ளட் மூன் (Super Blood Moon) என்றும் அழைப்படுகிறது. 
 
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் அளவை பொறுத்து சந்திர கிரகணங்களின் வகைகள் வேறுபடுகின்றன.
 
மே மாதத்தின் மொத்த சந்திர கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தோன்றுவதோடு கூடுதலாக, சந்திரன் பெரிஜியில் இருக்கும், அதாவது அதன் சுற்றுப்பாதையின் ஒரு பகுதியாக இது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு "சூப்பர் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. 
 
வானியலாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் சந்திரன்" (Flower Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" (Super Flower Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணத்தின் நிகழ்வு இந்தியாவில் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடிவடையும். அதேபோல முழு சந்திர கிரகணம் மாலை 4.41 முதல் 4.58 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழும் என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இதனை காணமுடியும். இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி காணலாம்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிஃபித் ஆய்வகம் (Griffith Observatory) நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும் என எதிர் பார்க்கப்படுகிறது. 
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!