• Friday, 05 September 2025
IPL 2021 Exclusive: மும்பை, அகமதாபாத்தில் மட்டும் ஐபிஎல்; சென்னை வரும் தோனி... அவசரப்படுகிறதா பிசிசிஐ?!

IPL 2021 Exclusive: மும்பை, அகமதாபாத்தில் மட்டும் ஐபிஎல்; சென்னை வரும் தோனி... அவசரப்படுகிறதா பிசிசிஐ?!

ஐபிஎல் 2021 சீசனை ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது பிசிசிஐ. கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இம்முறை இந்தியாவிலேயே நடத்ததிட்டமிடப்படுகிறது. ஆனால், கொரோனா சூழல் இன்னும் முற்றிலும் சரியாகாததால் எந்தெந்த மாநிலங்களில் போட்டிகளை நடத்துவது என்கிற குழப்பம் பிசிசிஐ-ல் நீடிக்கிறது.
ஐபிஎல் கோப்பை

முதலில் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அஹமதாபாத் ஆகிய நகரங்களைத் தேர்வு செய்துவைத்திருந்தது பிசிசிஐ. ஆனால், இம்முடிவுக்கு ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. "சில ஊர்களில் மட்டுமே போட்டிகளை நடத்தினால் அது அந்தந்த ஹோம்கிரவுண்டு அணிகளுக்கு மட்டுமே சாதகமாக முடியும். இதை ஏற்றுகொள்ளமுடியாது" எனத் தங்கள் அதிருப்தியை அழுத்தமாகப் பதிவு செய்தன. இதனால் இப்போது இரண்டே மாநிலங்களில் போட்டிகளை நடத்துவது என்கிற முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

 

Comment / Reply From