• Thursday, 04 September 2025
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா புதிய உச்சம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா புதிய உச்சம்!

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சென்னை மற்றும் அகமதாபாத் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பை தந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா புதிய உச்சம்!

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் புதிய உச்சத்தை அடைந்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மென் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் புதிய உச்சங்களை தொட்டுள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய ஓபனரான ரோகித் சர்மா டாப் 10-ற்குள் நுழைந்துள்ளார். இதுவரை தனது கேரியரிலேயே இல்லாத சிறந்த நிலையாக 8வது இடத்திற்கு ரோகித் முன்னேறியுள்ளார். அவர் தரவரிசையில் அதிரடியாக 6 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார். அதே நேரத்தில் தரவரிசையில் 8வது இடத்தில் இருந்த சத்தேஸ்வர் புஜாரா 10ம் இடத்திற்கு கீழறிறங்கியுள்ளார். விராட் கோலி மாற்றமில்லாமல் 5வது இடத்திலேயே தொடருகிறார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சென்னை மற்றும் அகமதாபாத் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பை தந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரும் அதிரடியாக 4 இடங்கள் முன்னேறி தனது கேரியரிலேயே சிறந்த இடத்திற்கு உயர்ந்திருக்கிறார்.

அஸ்வின் சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தியதோடு சதமும் விளாசினார், அதே போல அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் வீழ்த்திய 4வது இந்திய வீரர் ஆனார். இவர் ஒட்டுமொத்த அளவில் இச்சாதனை அதிவேகமாக படைத்த பந்துவீச்சாளர் வரிசையில் முரளிதரனுக்கு அடுத்ததாக 2ம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பந்து வீச்சாளர்களுக்கான டாப் 10 பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் சரிவை கண்டிருக்கிறார். அவர் 9வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 இடங்கள் சரிந்து 6ம் இடத்தையும், ஸ்டூவர்ட் பிராட் ஒரு இடம் சரிந்து 7ம் இடத்தையும் பெற்றிருக்கின்றனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்தையும், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் முதலிடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment / Reply From