• Friday, 05 September 2025
அஜித், விஜய் ஓட்டு திமுகவுக்கு?

அஜித், விஜய் ஓட்டு திமுகவுக்கு?

 

தமிழக மக்கள் இன்று காலை முதலே தங்கள் ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு முன்கூட்டியே வந்து தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் நடிகர்களின் வாக்கு எந்த கட்சிக்காக இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களிடம் இருந்தாலும் அது ரகசியமாகவே இருக்கும். இந்த சட்டசபை தேர்தலில் அதற்கு மாறாக அஜித்தும் விஜய்யும் திமுகவுக்குதான் வாக்களித்தனர் என்ற தகவல் சென்னையை பரபரப்பாக்கியுள்ளது.

நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளை ஓட்டியபடியே வந்து வாக்களித்தார். அவர் ஓட்டி வந்த சைக்கிள் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் இருந்தது. அதேபோல் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித் வாக்களிக்க வந்தபோது அவர் அணிந்திருந்த முகக்கவசம் கறுப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்தது. எனவே இருவரும் தங்களது வாக்கு திமுகவுக்கே என்பதை சூசகமாக தெரிவித்துள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. இதுபற்றி அஜித், விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால், இது எதேச்சையாக அமைந்த ஒன்று என்று மறுக்கின்றனர்.

Comment / Reply From