• Friday, 05 September 2025
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 374 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,06,130 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 41,18,46,401 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



Comment / Reply From