
இரண்டாம் வகை கொரோனா அறிகுறிகள்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து தரப்பினரும் சுய பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
இரண்டாவது அலை மூலம் பரவும் கொரோனா வைரஸ் முந்தைய அறிகுறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தனி நபரின் உடல் மற்றும் உளவியல் நலனை பாதிக்கக்கூடியது. சளி, காய்ச்சல் தவிர வேறுவிதமான அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது.
சிவப்பு நிற கண்:
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பது, வெண்படல அழற்சி போன்றவையும் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் கண் காட்சியளித்தால் நீர்க் கோர்த்திருப்பது, வீக்கம் போன்றவைகளும் உருவாகலாம். புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் இந்த அறிகுறிகளை கொண்டிருந்தது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
சோர்வு:
வைரஸ் சார்ந்த நோய் தொற்றோ, வேறு விதமான நோய் பாதிப்போ ஏற்பட்டு குணமடைந்தாலும், இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது கால அவகாசம் தேவைப்படும். அதுவரை சோர்வு இருக்கும். ஆனால் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த நோயாளி கள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும். கொரோனா சிகிச்சைக்கு பிறகு சோர்வு, பலவீனம், தசை வலி போன்ற பாதிப்புகள் 63 சதவீதம் பேருக்கு 6 மாதங்கள் வரை நீடிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நரம்பு பாதிப்பு:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் நரம்பியல் பாதிப்புக்கான அறிகுறிகளையும் கொண்டிருக்கிறார்கள். நீண்ட கால கொரோனா நோயாளிகளில் 58 சதவீதம் பேர் மூளை பாதிப்பு அல்லது மன குழப்பத்திற்கான அறிகுறிகளை கொண்டிருந்திருக்கிறார்கள். அத்துடன் ஞாபக மறதி, தூக்கமின்மை உள்பட நரம்பியல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
வயிற்று பிரச்சினை:
இரைப்பை சார்ந்த பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், வலி ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஏதேனும் செரிமான அசவுகரியத்தை எதிர்கொண்டால், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து நிவாரணம் பெறுவது நல்லது.
மூச்சுவிடமுடியாத நிலை:
மூச்சு விட சிரமப்படுவது, இதயம் படபடப்புடன் துடிப்பது, மார்பில் அசவுகரியம் ஏற்படுவது போன்றவையும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். டிஸ்பினியா எனப்படும் மூச்சுத்திணறல் பிரச்சினையும் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை தற்காலிகமாக ஏற்படலாம். சிறிது நேரத்திற்கு பிறகு இயல்புக்கு திரும்பிவிடலாம். நீண்ட நேரம் நீடித்து உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம். டிஸ்பினியா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.
இதய துடிப்பு:
இதயம் வேகமாக துடிப்பது அல்லது இதய படபடப்பு தொடர்ந்து கொண்டிருப்பது கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 78 சதவீதம் பேர் இதயம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டிருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது.
வழக்கத்திற்கு மாறான இருமல்:
கொரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறியாக இருமல் அமைந்திருக்கிறது, ஆனால் வழக்கமான இருமலில் இந்து வேறுபட்ட ஒலியுடன் தொடர்ச்சியாக இருமல் இருந்து கொண்டிருந்தால் விழிப்பாக செயல்பட வேண்டும்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 4, 2021
-
'தி லெஜண்ட்’ விமர்சனம்
- Post By Admin
- July 30, 2022
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!