• Friday, 05 September 2025
ஓட்டுக்கு பணம் வாங்காதீர் : சரத்குமார் வேண்டுகோள்

ஓட்டுக்கு பணம் வாங்காதீர் : சரத்குமார் வேண்டுகோள்

மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அழகரை ஆதரித்து, கோ.புதூர் பகுதியில் சமத்துவமக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் 70 ஆண்டு திராவிட கட்சிகள் ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை பற்றி சிந்திக்கிறார்கள். இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி வெற்றி பெற்றால் லேப்டாப் வழங்குவதாக கூறியுள்ளோம். அது இலவசம் அல்ல.

அதிமுக இலவசமாக வாஷிங்மெசின் தருவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. வாஷிங் மெஷின் தருகிறார்களே, அதற்கு தேவையான மின்சாரம், சோப்பு மற்றும் சோப்பு பொடிகளையும் இலவசமாக வழங்குவார்களா?

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கமல்ஹாசன் உழைப்பால் உயர்ந்தவர். அவருன் ஒத்த கருத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம். காலில் விழுந்து கேட்கிறேன், தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். ஓட்டுக்காக பணம் வாங்குவது எதிர்கால சமூகத்தை முழுமையாக பாதிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comment / Reply From