• Friday, 05 September 2025
ஜில்லுன்னு ஒரு டூர்: கொடைக்கானலில் குடும்பத்துடன் ஸ்டாலின்

ஜில்லுன்னு ஒரு டூர்: கொடைக்கானலில் குடும்பத்துடன் ஸ்டாலின்

ஸ்டாலின் பயணம் குறித்து தி.மு.க-வினரிடம் பேசியபோது, “நல்லபடியாக வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கருத்துக் கணிப்புகளும், கள நிலவரமும் தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது. தி.மு.க-தான் ஆட்சிக்கு வரவிருக்கிறது என்பதால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஸ்டாலினையும், மருமகன் சபரீசனையும், மகன் உதயநிதியையும் ரீச் பன்னுவதற்கு முயன்று வருகிறார்கள். போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும், புதியவர்களும், சீனியர்களும் அடுத்து அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பிடிக்க முட்டி மோதுகிறார்கள். அதிலும் சிலர் ஸ்டாலினின் செனடாப் சாலை இல்லத்தில் உட்கார்ந்துகொண்டே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளார். எனினும், கட்சியினரிடம் அதனைக் காட்டக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தவாறு, திடீரென கோடை ட்ரிப் செல்ல பிளான் போட்டார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும், மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். கொடைக்கானலில் தங்குவது, சுற்றிப் பார்ப்பது என எல்லாவற்றையும் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும், அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் மேற்கொண்டிருக்கிறார்கள்” என்றவரிடம் யார் யார் சென்றிருக்கிறார்கள்? என்று கேட்டோம்.

தொடர்ந்து பேசியவர்கள், “ஸ்டாலின் வெளியூர் எங்கு சென்றாலும் ஸ்பெஷல் சார்டட் பிளைட் எனப்படும் குட்டி விமானத்தில்தான் பயணம் செய்வார். திருமேணி எர்த் மூவர்ஸ் பிரபாகருடைய குட்டி விமானத்தில் பறப்பதுதான் வாடிக்கை. அதன்படி, இந்தமுறை இரு விமானங்களில் பறந்துள்ளனர். ஸ்டாலின், துர்கா, உதயநிதி, கிருத்திகா உதயநிதி, சபரீசன், செந்தாமரை, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் இவர்கள் அனைவரது பிள்ளைகள் என மொத்தம் 17 பேர் செல்ல வேண்டியிருந்ததால் இரு குட்டி விமானத்தில் சென்றிருக்கிறார்கள். சென்னையில் இருந்து மதுரை சென்று இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்குச் செல்கிறார்கள். இன்று 16-ம் தேதி செல்லும் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், 19-ம் தேதி வரை அங்கு தங்குகிறார்கள். வரும் 19-ம் தேதி மீண்டும் சென்னை கிளம்புகிறார்கள். குடும்பத்துடன் ஓய்வெடுக்க வந்திருக்கும் தன்னை எக்காரணம் கொண்டும் கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலில் சந்திப்பது கூடாது என கட்சியினருக்கு ரகசிய உத்தரவும் போடப்பட்டுள்ளது” என்பதோடு முடித்தனர்.

Comment / Reply From