• Friday, 05 September 2025
தங்கம் விலை சர்....

தங்கம் விலை சர்....

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி உக்ரைன்- ரஷியா இடையே போர் தொடங்கிய போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு பவுன் ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியது.

அதன்பின் 2 நாட்கள் விலை குறைந்து ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மறுநாள் தங்கம் விலை மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 40 ஆயிரத்து 440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 5,055 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1800 அதிகரித்து ரூ. 75 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.20க்கு விற்கிறது.
 
 
 

Comment / Reply From