• Friday, 05 September 2025
தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி : பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி : பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக முதலமைச்சர்  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மிகக்குறைவாகவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும்.
 

 

Comment / Reply From