• Friday, 05 September 2025
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு : ரஜினி, கமல், அஜித், விஜய் வாக்களித்தனர்

தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு : ரஜினி, கமல், அஜித், விஜய் வாக்களித்தனர்

தமிழகத்தில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி தமிழகத்தில் 15% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 21.23 சதவிகித வாக்குகளும் குறைந்த அளவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.

நடிகர் அஜித் தனது  மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கே வந்து வாக்களித்தார். நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்த வந்தார். வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களித்துவிட்டு திரும்பி செல்கையில் தனது காரில் சென்றுவிட்டார். முன்னதாக  ரஜினி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். 
 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நர்சரி பள்ளியில், ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். உடன், அவரது தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, இளையமகன் ஜெயபிரதீப், ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி ஆகியோரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின்னர் பேட்டி அளித்த ஓ.பி.எஸ்., "சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அனைத்து அ.தி.மு.க வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க., மூன்றாம் முறை ஆட்சி அமைக்கும்" என்றார்.

 
 

Comment / Reply From