• Friday, 05 September 2025
நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி பாதிப்பா? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி பாதிப்பா? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திடீர் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திரைப்படங்களில் தன்னுடைய நகைச்சுவைமூலம் முற்போக்கு சிந்தனையை விதைத்து வருபவர் நடிகர் விவேக். இயற்கை விவசாயம், மரக்கன்று நடுதல் போன்ற சமூக பணியிலும் அக்கறை கொண்டவர். நேற்று காலை சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக். கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்வது அவசியல் என்று பேட்டியளித்தார்.

இதற்கிடையே இன்று காலை வீட்டில் இருந்த விவேக்கிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்படவே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதய துடிப்பு சீராக இயங்குவதற்காக எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக  மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக் கொண்டதுதான் விவேக் மாரடைப்புக்கு காரணமாக இருக்கும் என்ற வதந்தியும் பரவிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Comment / Reply From