• Friday, 05 September 2025
பாஜக ஆட்சி : டென்ஷனாகும் சித்தார்த்

பாஜக ஆட்சி : டென்ஷனாகும் சித்தார்த்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மத்திய அரசை மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேசமயம் தடுப்பூசி போடும் பணியும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன் தடுப்பூசி விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் மத்திய அரசை மீண்டும் சாடியுள்ளார்.  மேற்குவங்க பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கு விரைவில் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனை குறிப்பிட்ட சித்தார்த், “பாஜக எப்போது ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறதோ, அப்போது தான் இந்த மொத்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.

Comment / Reply From