• Friday, 05 September 2025
புதுவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : கவர்னர் தமிழிசை

புதுவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : கவர்னர் தமிழிசை

கொரோனா தொற்றில் இரண்டாம் அலை இந்தியாவில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய,மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன. புதுவையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அங்கும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் ‘2வது அலை இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது. எனவே இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

சில மாநிலங்களில் படுக்கை வசதி இன்றி, ஆக்சிஜன் இன்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர் அப்படிபட்ட சூழ்நிலை இங்குள்ள மக்களுக்கு வரக்கூடாது என்பதால் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளோம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

புதுச்சேரியில் ஆக்சிஜன், ரெம்டெசிவர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. மருந்து தட்டுப்பாடு என சில அரசியல் தலைவர்கள் அறிக்கை கொடுக்கின்றனர்.பொதுமக்களுக்கு அச்சத்தை தவிர்த்து தைரியத்தை அரசியல் கட்சியினர் கொடுங்கள். புதுச்சேரியில் 95% மக்கள் முகக்கவசம் அணிகின்றனர்” எனக் கூறினார்.

Comment / Reply From