• Friday, 05 September 2025
மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

5 மாநில தேர்தலில் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அடுத்தகட்ட வாக்குப்பதிவு மார்ச் 5-ம் தேதி நடைபெறுகிறது.
 
இந்நிலையில், முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்காள்ளப்பட்டுள்ளன.

Comment / Reply From