• Friday, 05 September 2025
மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு : 50 லட்சம் நிதி அளித்தார்

மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு : 50 லட்சம் நிதி அளித்தார்

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 
 
முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். 
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் ரஜினிகாந்த்.
முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், “கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் கூறினார்.
 
முன்னதாக தன்னை சந்திக்க வரும்போது ”பொன்னாடை பூங்கொத்து தரவேண்டாம். அதற்கு பதிலாக புத்தகம் தரலாம்.” என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருந்ததால் முதல்வரை சந்திக்க வந்தபோது கையில் ஒரு புத்தகத்தோடு வந்தார்.

Comment / Reply From