• Friday, 05 September 2025
விடைபெறுகிறார் மிதாலி

விடைபெறுகிறார் மிதாலி

இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருப்பதாக கூறினார்.

மேலும் 2022-ம் ஆண்டில் நியூசிலாந்தில் உலக கோப்பை போட்டி நடக்கிறது. இதுவே தனது கடைசி போட்டியாக இருக்கும் எனக்கூறினார்.

38 வயதான மிதாலிராஜ், 7 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீராங்கனை ஆவார்.

Comment / Reply From