• Friday, 05 September 2025
விண்ணை தாண்டும் வணிக சிலிண்டரின் விலை

விண்ணை தாண்டும் வணிக சிலிண்டரின் விலை

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. 
 
இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 266 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இதற்கு முன்னதாக 1,734  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 266 அதிகரித்து 2000.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

Comment / Reply From