• Friday, 05 September 2025
விவசாயிகள் போராட்டம் : இரக்கமற்ற மத்திய அரசு

விவசாயிகள் போராட்டம் : இரக்கமற்ற மத்திய அரசு

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் பரபரப்பில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் வெளியே தெரியாமல் இருக்கிறது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 133 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.ஆனாலும் விவசாயிகள் மனம் தளராமல் தொடர்ந்து டெல்லியின் பல எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நான்கரை மாதங்களாக பணி, வெயில், பசி, பட்டிணி, உயிரழப்பு பாராமல் போராடிவரும் விவசாயிகளின் நிலை பார்த்து மத்திய அரசு இரக்கமின்றி வஞ்சிப்பது நியாயமற்றது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comment / Reply From